அதிர்ச்சி... இட்லி சாப்பிட்டா கேன்சர் வரும்... உணவகங்களில் விற்பனைக்கு தடை?
Dinamaalai March 01, 2025 02:48 AM


 
தமிழகத்தில் தென் பகுதிகளில் இட்லியை துணிபோட்டு வேகவைப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. நகரங்களில் இட்லி குக்கர்களில் எண்ணெய் தடவி இட்லி ஊற்றுவர் . இதே கர்நாடக மாநிலத்தில்  பெங்களூருவில்   பெரும்பாலான உணவகங்களில்  இட்லியை வேக வைப்பதற்கு துணிக்கு பதிலாக பாலித்தீன் தாள்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக இட்லி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படும் நிலையில் பச்சிளம் குழந்தைகளுக்கு கூட இட்லியை தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது வாடிக்கை.  

இட்லியை துணி போட்டு வேக வைப்பது தான் வழக்கம். அதற்கு மாற்றாக பாலத்தீன் தாள் போட்டு அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கிறார்கள்.இதனால் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு ஏற்படும் அபாயம் அதிகம். இது குறித்து  உடனடி விசாரணை நடத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன. இதன்படி  அவர்கள் சம்பந்தப்பட்ட உணவகங்களில்  சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையில்  சுமார் 251 ஹோட்டல்களில் இட்லி மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். அதில் 51 உணவகங்களை சேர்ந்த இட்லி மாதிரியில்  கேன்சர் வரவழைக்கும் ரசாயனங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.  இதன் காரணமாக கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி இனி இட்லியை வேக வைப்பதற்கு பாத்திரத்தில் பாலித்தீன் தாள்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என உறுதி கொடுத்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.