பிச்சை க்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!
Webdunia Tamil March 09, 2025 06:48 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஒன்றிய தீ வைக்க முயன்ற ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மார்ச் 4ஆம் தேதி நள்ளிரவு லாத்தூர் ஹவுஸ் என்ற நகரத்தில் ஒரு கடை வாசலில் பிச்சைக்காரர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த யோகேஷ் என்பவர் அந்த பிச்சைக்கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் பிச்சைக்காரருக்கு தீக்காயம் ஏற்பட்டதால்அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த யோகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த பிச்சைக்கார்ர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அதனால்தான் ஆத்திரத்தில் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பிச்சைக்காரர் மீது தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.