தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் மகளிர் தினத்தினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை அக்கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வரும் வழியில் காந்தி சிலை அருகே அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் சுகர்னா, இளையராஜா, குமரேசன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் புஸ்சி ஆனந்த்க்கு வரவேற்பு அளிக்க கூட்டமான கட்சி கொடிகளுடன் நின்று அக்கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் வைத்து மலர்களால் அலங்கரித்து வைத்து இருந்தனர். அதற்கு புஸ்சி ஆனந்த் மலர் தூவி மரியாதை செய்ய ஏற்படு செய்ய திட்டமிட்டு மாலை 5 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் இரவு சுமார் 9.15 மணிக்கு தான் வந்தார். அதுவும் இந்த வழியில் வராமல் குறுக்கு வழியில் சென்று மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்திருந்த மேடைக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களை புறக்கணிக்கப்படுவதாகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
ஊழலற்ற ஆட்சியை விஜய் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் தவெகவிற்கு வந்ததாகவும், குறையை சொல்ல தான் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நிற்பதாகவும் ஆனால் பொதுச்செயலாளர் ஆனந்த் எங்களை பார்க்காமல் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் பதவி வாங்கி விடுவார்கள் என்பதால் மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் பயப்படுவதால் பார்க்க விடாமல் தடுப்பதாக தெரிவித்தனர். தவெக தலைவர் விஜய் அரசியல் தெரிந்தவர்களை வைத்து அரசியல் செய்யவேண்டும். ஊழல் வாதிகளை கொண்டு ஊழலை ஒழித்து விட முடியாது. இதே போன்று கட்சி நடத்தினால் டெபாசிட் கூட வாங்க முடியாது, அறிவார்ந்த அரசியல் வாதிகளை உடன் வைத்து அரசியல் செய்ய வேண்டுமென தவெக தொண்டர்கள் தெரிவித்தனர்.