ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பேசிய அவர், தி.மு.க அரசு மீதான விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேச்சு குறித்து சென்னை மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். புதுமைப் பெண் திட்டம் மூலம் ஏராளமான பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டுகள் தேவையற்றது" என்று தெரிவித்தார்.