வரும் மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. விரைவில் IPL தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையோடு தோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எஸ் தோனியின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்வில் அவர் வேட்டி சட்டை அணிந்துள்ளார்.