காணாமல் போன 3 பேர்…நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு… ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல….மர்மத்தின் பின்னணி என்ன…. ?
SeithiSolai Tamil March 10, 2025 05:48 AM

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் வருண் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக வருணும் அவரது மாமாவான யோகேஷ் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகியோர் திடீரென மாயமாகினர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ராணுவத்தினர் உதவியோடு தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நீர்வீழ்ச்சியின் அருகே கிடப்பது ட்ரான் மூலமாக தெரியவந்தது. அதாவது மலர் பகுதியில் இஷு நூலாவில் உள்ள கடுமையான மலைப்பாங்கில் இருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததற்கான சாட்சியங்களும் இல்லை, அதே சமயத்தில் அவர்களின் உடலில் காயங்களும் காணப்படவில்லை. இந்த சம்பவம் தற்போது ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது பிலாவர் சட்டமன்ற உறுப்பினர் சதேஷ் ஷர்மா, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் உரையாற்றிய போது 3 மாயமான குடிமக்களைப் பற்றி அரசிடம் விளக்கம் கேட்டார். அதற்கு சுயேச்சை எம்எல்ஏ ரமேஷ்வர் சிங் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க கதுவா மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு எதிராக ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்த, பாதுகாப்பு வீரர்கள் அவரை அழைத்து சென்றனர் என கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.