இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா. இவர் கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியுடன் ஜடேஜா ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜடேஜா பௌலிங் போட்டு முடித்ததும் விராட் கோலி அவரை கட்டி அணைத்து எமோஷனல் ஆனார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கு முன்பாக போட்டி நடைபெறும் போது விராட் கோலி இப்படித்தான் அவரை கட்டிப்பிடித்தார்.
இதே போன்று அஸ்வின் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவும் அன்றைய போட்டியில் விராட் கோலி அவரை கட்டி பிடித்தார். தற்போது ஜடேஜாவை அவர் கட்டி அணைத்து எமோஷனல் ஆனார். ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் இந்த போட்டியோடு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்று கூறப்படும் நிலையில் ஜடேஜாவும் ஓய்வை அறிவிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது