10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் - விரைந்து முடிக்க கோரிக்கை
Top Tamil News March 11, 2025 02:48 PM

செங்கல்பட்டு அருகே 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இதுவரை மேம்பால பணிகள் முடிவடையவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில், ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேம்பால பணிகளுக்காக ரயில்வே கேட் முன்பு சுவர் வைத்து அடைத்ததால் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.