கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கும் அமெரிக்கா மக்கள். இதற்கான காரணம் என்ன? ஏன் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்க வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சில அமெரிக்க நிறுவனங்கள் முட்டைகளின் விலை அதிகரித்து வருவதை தடுப்பதற்காக மக்களை தங்கள் வீடுகளில் கோழிகளை வளர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோழிப்பண்ணைகளில் ஏற்ப்பட்ட தொற்றுநோய் காரணமாக சுமார் 166 பில்லியன் கோழிகள் அழிந்தது.
அப்போது, ஒரு முட்டையின் விலை 1.93 டாலராக இருந்தது. ஆனால், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முட்டை விலை சராசரியாக 4.82 டாலராக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நியூயார்க், சான் பிரான்சி கோ மற்றும் சிகாகோ போன்ற நாடுகளில் முட்டைகளின் விலை $4.95 முதல் $10 வரை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:
மேலும், அமேரிக்கா வேளாண் துறை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தடுப்பூசி ஆராச்சிக்கான நிதியையும், நிவாரண நிதியையும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முட்டையின் விலை 41% அதிகரித்த நிலையில் இந்த நிலை மாற மூன்று நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், கோழிகளை வாடகைக்கு விட சில நிறுவனங்கள் முடிவு மேற்கொண்டது.
மேலும், கோழிகளை பராமரிப்பதற்க்கான சில பயிற்சிகள், புத்தகம், கோழிக்கு ஆரோக்கியமான தீவனம் போன்றவை பற்றி தொலைபேசித் தகவல்களை நிறுவனங்கள் வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமான கோழி ஒன்று வாரத்திற்கு ஐந்து முட்டைகளை இடும் எனவும் இதனால் இந்த முட்டை பிரச்சனை சரி ஆகுமென மக்கள் எண்ணுகிறார்கள். மேலும், இது ஒரு நீண்ட கால பராமரிப்பு இல்லை என்பதால் மக்கள் இந்த சேவைகளை செய்ய முடியும் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: