தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த வருடம் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்க்கு சமீபத்தில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் இதுவரையில் ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் வருகிற 14-ம்தேதி முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை கமெண்டோக்கள் தமிழ்நாட்டில் மட்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். தற்போது விஜய் கலந்து கொள்ளும்நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு பவுன்சர்கள் அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் நிலையில் இனி அரசு பாதுகாப்பு கொடுக்கும். மேலும் இந்த பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே பல கேள்விகள் மற்றும் யூகங்கள் எழுந்த நிலையில் விஜயை ரகசியமாக கண்காணிப்பதற்காக தான் ஒய் பிரிவு பாதுகாப்பு என்றும் கூறப்படுகிறது.