'இனி இந்தியாவில் ஸ்டார்லிங் உபகரணங்களை ஏர்டெல் ஸ்டோர்களில் வாங்கலாம்' என்று எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் கைகோர்த்தது குறித்து நேற்று அறிவித்திருந்தது ஏர்டெல் நிறுவனம்.
இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் ஜியோவின் மார்க்கெட்டை பாதிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது போலவே, இன்று தாங்களும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் அறிக்கையில், "இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜியோ உலகின் மிகப்பெரிய மொபைல் ஆப்பரேட்டராக உருவெடுக்கும். மேலும், இதன்மூலம் இந்தியாவில் உள்ள கிராமப்புரம் மற்றும் தொலைத்தூர பகுதிகளுக்கு கூட இடைவிடாத நெட்வர்க்கை கொண்டு சேர்க்க முடியும். ஜியோ ஸ்டோர்களில் வெறும் உபகரணங்களை மட்டும் விற்கப்படாது. அது இன்ஸ்டாலும் செய்து தரப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடவேண்டும் என்று முகேஷ் அம்பானியும், ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு தான் செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க்கும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ஏர்டெல் நிறுவனம் அம்பானி பக்கம் நின்றது.
கடந்த ஆண்டு ஜியோ, ஏர்டெல் vs ஸ்டார்லிங்காக இருந்த மோதலுக்கு பிறகு, இந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது ஸ்டார்லிங் நிறுவனம்.
'ஸ்டார்லிங் உபகரணங்களை எங்கள் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்' என்று கூறிய ஏர்டெல் நிறுவனத்தை சற்று முந்தி, 'உபகரணங்கள் பிளஸ் இன்ஸ்டலேஷன் இரண்டுமே எங்களிடம் கிடைக்கும்' என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் கடந்த அமெரிக்க பயணத்தின் போது, அவர் எலான் மஸ்க்கை சந்தித்தார். அந்த சந்திப்பிற்கும், இந்த ஒப்பந்தங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK