உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் பகுதியில் ஒரு 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த பெண்ணின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் அந்த பெண் தன் கணவனுக்கு போன் செய்து குழந்தைகள் இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவருடைய கணவர் வீட்டிற்கு வந்த நிலையில் குழந்தைகள் இறந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான வாங்கி வந்தேன்.
அப்போது குழந்தைகள் சுயநினைவு இல்லாமல் கிடந்ததால் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறினார். ஆனால் அந்தப் பெண்ணின் பேச்சில் நம்பிக்கை இல்லாததால் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது இரட்டை குழந்தைகள் அடிக்கடி இரவு நேரத்தில் அழுவதால் சரி வர தூங்க முடியவில்லையாம். அழுகையை நிறுத்த அவர் முயற்சி செய்த போதிலும் பலன் கிடைக்கவில்லை. இதனால் கோபத்தில் வாயில் துணியை வைத்து திணித்து மூச்சு திணற வைத்து குழந்தைகளை கொலை செய்ததாக கூறினார். இதேபோன்று பிரேத பரிசோதனை அறிக்கைகளும் குழந்தைகள் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.மேலும் இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.