Good Bad Ugly: ``கொண்டாடத் தயாராகுங்க" - அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்
Vikatan March 11, 2025 11:48 PM

நடிகர் அஜித் குமார் தனது 63வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.வி பிரகாஷிடம் 'குட் பேட் அக்லி' குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

Good Bad Ugly

அதற்கு பதிலளித்த அவர், " 'குட் பேட் அகலி' மாஸ் செலிபிரேஷன் ட்ராக்கா இருக்கும். ஆதிக் ரவிச்சந்திரனுடன் நான் இணைந்து பணியாற்றிய 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'மார்க் ஆண்டனி' என இரண்டு படங்களின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மூன்றாவது முறையாக ஆதிக்குடன் இணைந்திருக்கிறேன்.

அந்தப் பாடல்கள் வெளியாகும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியும்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், " இப்போது நிறைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். ரஞ்சித் சாருடன் இணைந்து ஒரு புதிய படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். அதேமாதிரி செல்வராகவன் சாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

G.V. பிரகாஷ்

சிம்பொனி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், " அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். என்னுடைய க்ரேட் இன்ஸ்பிரேஷன் அவர். நான் இசைத்துறைக்கு வருவதற்கு ராஜா சாரும், ரஹ்மான் சாரும்தான் காரணம்" என்றிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.