“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!
SeithiSolai Tamil March 12, 2025 01:48 PM

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சின்னத்தம்பி, ராமுவுடன் நெக்குந்தி நோக்கி இருசக்கர வாகனத்தில் பந்தல் அமைப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இவர்களின் பைக் மீது கார் மோதியது. இதில் இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.