தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - கர்நாடக முதல்வருடன் திமுக குழு சந்திப்பு
Top Tamil News March 12, 2025 07:48 PM


தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் திமுக குழு சந்தித்து பேசியது. 

நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில  பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் திமுக குழு சந்தித்து பேசியது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்  தொடர்பாக கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் தமிழக குழு சந்தித்தது. அமைச்சர் பொன்முடி, எம்.பி., எம்.எம்.அப்துல்லா ஆகியோர் சந்தித்து பேசினர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.