அறிவிப்பு! திமுக எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக பதவி நியமனம்!!! - துரைமுருகன்
Seithipunal Tamil March 12, 2025 07:48 PM

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது," தி.மு.க. மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தி.மு.க. மாணவரணி செயலாளரான எழிலரசன் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தி.மு.க. மாணவரணி இணை செயலாளரான எஸ்.மோகன் வர்த்தக அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்களில் தி.மு.க. சார்பில் பேசுவதற்காக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.எம்.பி.க்கள் செல்வகணபதி, கே.என். அருண்நேரு, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் தி.மு.க. சார்பில் விவாதங்களில் பங்கேற்பர்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தேர்தலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக,அரசியல் ஆர்வலர்கள் பரவலாக போசி வருகின்றனர். 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.