“மீண்டும் உயிரோடு வந்த இறந்து போன நாய்”… சினிமாவை மிஞ்சிய அறிவியல்… விஷயத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!
SeithiSolai Tamil March 12, 2025 01:48 PM

சீனாவில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்து கொண்டே வருகிறது. குளோனிங் முறையில் பிராணிகள் உருவாக்கப்படுவது போன்ற தொழில்நுட்ப வாய்ப்புகளை சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி சீனாவில் உள்ள ஹாங்சோவில் வசித்து வரும் பெண் ஷு. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது செல்லப் பிராணியான ஜோக்கர் என்ற நாயை மிகவும் பாசத்தோடு, பராமரிப்போடு வளர்த்து வந்தார். ஜோக்கர் அவருக்கு பாதுகாப்பு மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஷூ வளர்த்து வந்த செல்லப்பிராணியான ஜோக்கர் இதய குறைபாடுடன் கடந்த 2022 நவம்பரில் உயிர் இழந்தது.

இதனை அடுத்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ஷு மருத்துவப் பின்னணியை கொண்டவர் என்பதால் சீனாவில் செல்லப்பிராணி குளோனிங் பற்றிய வளர்ச்சியை கவனித்து வந்துள்ளார். இதனை அடுத்து ஒரு தனியார் நிறுவனத்தை அணுகி முழு கட்டணத்தையும் செலுத்தி ஜோக்கரின் தோலிலிருந்து மாதிரிகளை கொடுத்து ஒரு பிறப்பு குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கி உள்ளார். இந்த முறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு சீன புத்தாண்டுக்கு முன்பு ஷு தனது புதிய செல்லப் பிராணியை பெற்றார். இதனை அடுத்து அதற்கு “லிட்டில் ஜோக்கர்” என பெயரிட்டுள்ளார். க்ளோனிங் முறையில் பெறப்பட்ட செல்லப்பிராணி தனது ஜோக்கர் நாய் போன்ற சில செயல்களில் ஒத்து செல்கிறது என்பதையும் தனது துக்கத்தை குறைக்க உதவுகிறது எனவும் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.