இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள்,'தொடர்ந்து சண்டைப் போட்டுக்கொண்டே இருங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கம் அளித்தது' குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது," சீமானும் அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கின்றனர். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.சீமானும் அண்ணாமலையும் செய்யும் யுத்தத்திற்கும், தி.மு.க.வின் யுத்தத்திற்கும் பல வேறுபாடுகலுள்ளது.
கோவில்களில் தமிழில் அர்ச்சனைச் செய்யும் அர்ச்சகர் பெயர், கைப்பேசி எண்ணுடன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.தமிழில் அர்ச்சனைச் செய்தால் அர்ச்சனைச் சீட்டு கட்டணத்தில் 60 சதவீதத்தை ஈட்டுத்தொகையாக வழங்கி வருகிறோம்.
திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனையைத் தடுக்கவில்லை. அதே நேரத்தில தமிழ் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.
ஒரு மொழியைத் திணிக்கின்றபோது தான் அதற்கு எதிர்த்து நிற்கிறோம்" எனத் தெரிவித்தார். இவர் பேசிய விமர்சனங்கள் தற்போது அரசியல் ஆரவாளர்களிடையே பரவலாகி வருகிறது.