காட்டு மாடு முட்டி வனகாவலர் படுகாயம்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… வனத்துறை அதிகாரி அஞ்சலி..!!
SeithiSolai Tamil March 12, 2025 11:48 PM

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காவலர் அசோக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டு மாடு அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு முதன்மை தலைமை வனபாதுகாவலர் அன்வருதீன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.