தமிழக அரசியலில் நடிகர் விஜயால் எந்த தாக்கத்தையும் தனித்து ஏற்படுத்த முடியாது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கூறியுள்ளார்.
சென்னை சர்பிடி தியாகராயர் அரங்கில் TRAUMA திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜயதரணி கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, “தமிழக அரசியலில் நடிகர் விஜயால் எந்த தாக்கத்தையும் தனித்து ஏற்படுத்த முடியாது. அவருக்கு முழுமையான கூட்டணி அமைந்தால் மட்டுமே அவரால் சாதிக்க முடியும். இல்லாவிட்டால் அவரும் வாக்குகளை பிரிக்கக்கூடிய ஒரு கட்சியாக இருப்பார்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தொகுதிகள் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. திமுக பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக நாடாளுமன்ற தொகுதி வரையறை பிரச்சனை மற்றும் மும்மொழி கொள்கை என வேண்டும் என்று பிரச்சனைகளை எழுப்புகிறது. பாஜக தலைமையால் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய பொறுப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.