கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(72). இவரது பேரன் சூர்யா(26). அதே கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை காவலரான காசிலிங்கம் என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருப்பதற்காக 3 பேரும் மரத்திற்கு அடியில் நின்றனர். அந்த சமயம் புளிய மரத்தின் மீது இடி விழுந்ததால் காசிலிங்கமும், ராமமூர்த்தியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூர்யா படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சூர்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காசிலிங்கம் மற்றும் ராமமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்m இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.