நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!
Webdunia Tamil March 12, 2025 11:48 PM

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் சந்தேகம் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் கடத்தல் வழக்கில் பிரபல கன்னட நடிகை ரன்யா கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் 2 கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது வதந்தி என கூறிய துணை முதல்வர் டி. கே. சிவக்குமார், இந்த விவகாரத்திற்கு பின்னணியில் பாஜகவின் சதி திட்டம் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் 2 மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி ஒரு கற்பனையே. எந்தெந்த அமைச்சர்கள் என்பதை யாராவது பார்த்தார்களா? அரசியல்வாதிகளாக, நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, நூற்றுக்கணக்கான பேர் எங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். என்னுடன் யாராவது போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில், ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.