மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்மொழி விஷயத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தி.மு.க. கட்சியினர் நாடகமாடுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அதிரடியான பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது,"பா.ஜ.க. கட்சியினர் அவர்கள் தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். இதற்கு பதிலாக அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. கட்சியினர் நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) தான் நயவஞ்சகர்கள்" எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரமான பேச்சு அரசியல் ஆர்வலர்களிடையே தற்போது பரவலாககி வருகிறது.
பாஜக கட்சியினர் தி.மு.க கட்சியினரை வஞ்சிப்பதும் தி.மு.க கட்சியினர் பாஜக கட்சியினரை வஞ்சிப்பதுமாக இருந்து வந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் பாஜகவை வஞ்சித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.