டெல்லியில் நிர்மலா சீதாராமன் மற்றும் பினராயி விஜயன் ... எதற்கான சந்திப்பு?
Seithipunal Tamil March 13, 2025 08:48 AM

டெல்லியில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா இல்லத்தில் உள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்து உரையாடினார். மேலும் கேரளா அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு இதுவரை இருந்ததில்லை.

இதில் வயநாடு நிலச்சரிவு மறுசீரமைப்பிற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பினராயி  தலைமையில் உள்ள அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்நிலையில்தான் இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது கேரள மாநில அரசுக்கு போதுமான நிதியை ஒதுக்க பினராயி விஜயன் வலியுறுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான உரையாடல் சிறப்பானதாக அமைந்தது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் கேரள மாநில அரசின் டெல்லிக்கான பிரதிநிதி கே.வி. தாமஸ் ஆகியோர் உடனிருந்தனர்.மேலும் கேரளாவில் அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எல்.டி.எஃப் மற்றும் பாஜக இடையே மறைமுக புரிதல் இருப்பதாக கேரள மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.