அழுகையை நிறுத்தாத குழந்தை.. வாயில் துணி வைத்து தாய் விபரீதம்.. இரட்டை குழந்தைகளும் பலி.!
Tamilspark Tamil March 13, 2025 08:48 AM

உத்திரகான்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ஜ்வாலாப்பூர் பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண்ணுக்கு, திருமணம் முடித்து கணவர், 2 குழந்தைகள் இருக்கின்றனர். இரட்டை குழந்தைகளான இருவரும் ஆறு மாத கைக்குழந்தை ஆவார்கள்.

பெண்மணியின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று தம்பதியின் இரண்டு கைக்குழந்தைகளுக்கு மர்மமான முறையில் மயங்கி இருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.

இதனால் குழந்தைகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:

தாயின் அதிர்ச்சி செயல்

அப்போது, பெண்மணி தான் வெளியே கடைக்கு சென்றதாகவும், பின் மீண்டும் வரும்போது குழந்தைகள் மயங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார். கணவரும் அப்போது வீட்டில் இல்லை. பெண் முரணான பதில் அளிப்பதாக சந்தேகப்பட்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், குழந்தை இரவு நேரத்தில் அழுதுகொண்டு இருப்பதை தொடர்கதையாக இருந்துள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த இயலாமல் தாயும் தவித்துள்ளார்.

இது ஒருகட்டத்தில் குழந்தைகள் மீதான அதிருப்தியை உண்டாக்கவே, குழந்தை வாயில் துணியை அழுத்தி இருக்கிறார். இதனால் மூச்சுத்திணறிய குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.