பக்கவாதத்தை தடுக்க நம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
Top Tamil News March 13, 2025 12:48 PM

பொதுவாக ஸ்ட்ரோக் வந்த சில மணி நேரத்தில் ஹாஸ்ப்பிட்டல் போனால் உடனே காப்பாற்ற படுவீர் .சிலருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து, ஏற்படும் ரத்தக் கசிவினால் மூளை பகுதியில் ரத்தம் சேர்ந்துவிடும்.,இதுவும் ஸ்ட்ரோக்கே .இதை எவ்வாறு தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.மது அருந்துவதிலேயோ அல்லது புகை பிடிப்பதாலேயோ அல்லது தலையில் அடி  படுவவதிலேயோ இந்த பக்கவாதம் உண்டாகும் .
2.இந்த பக்கவாதத்தின் அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனை செல்ல வேண்டும். மருத்துவமனையில் பக்கவாதத்தை கையாள்வதற்கான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். .இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை மருந்துகள் மூலம் கரைப்பதன்  மூலமாகவோ, அடைப்பை நீக்குவதன் மூலமாகவோ சரி செய்வதன் மூலம் விரைவில் குணம் அடையலாம்.

3.நமது வாழ்க்கை முறையை அனைத்து நோய்களுக்கும் முக்கியமான காரணமாகும். வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த ஸ்ட்ரோக்கை தடுக்கலாம்.
4.மேலும் இந்த பக்கவாதத்தை நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது,மூலம் தடுக்கலாம்  
5.இந்த பக்கவாதம் தடுக்க புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது,மூலம் தடுக்கலாம்  
6.பக்க வாதத்தை தடுக்க சத்தான உணவு முறை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் தடுக்கலாம் ,
7. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது போன்றவற்றின் மூலம் பக்கவாதத்தை தடுத்து ஆரோக்கியமாய் வாழலாம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.