குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதல் கோடை விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
SeithiSolai Tamil March 13, 2025 04:48 PM

தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டு விரைவில் முடிவடைய போகிறது. தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 28ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதியை தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதோடு அதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இதேபோன்று 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மேலும் கோடைகால விடுமுறை குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதலும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.