பி.எம்ஸ்ரீ திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்து இருந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடுங்க- செல்வப்பெருந்தகை
Top Tamil News March 13, 2025 03:48 AM

பி.எம்ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் கொடுத்து இருந்தால் ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கல்லிடைக் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கவிஞர் சேக்பீர் அவர்களின் கவிதைக் கோதை எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், “முன்பெல்லாம் தேசத்திற்கு வெளிநாட்டில் அச்சுறுத்தல் இருக்கும் தற்போது உள்நாட்டிலே அச்சுறுத்தல் உள்ளது. தமிழ்நாட்டு மக்களை அந்நியப்படுத்தியும், புறக்கணித்தும் வரும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்த அவர்,  வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் ஜி.எஸ்.டி வரி செலுத்தி வருகிறது தமிழ்நாடு. ஆனால் தமிழ்நாட்டின் உரிமையை புறக்கணிக்கிறது ஒன்றிய அரசு. பெரியாரை இழிவு படுத்தி ஒன்றிய அமைச்சர் பேசுகிறார். இங்கு இருக்கும் சிலர் அவர்கள் சார்ந்த இயக்கங்களை வைத்து பெரியாரை வைத்து அவமதிக்கிறார்கள். 

தமிழ்நாடு மக்களை அவமதித்ததற்கு ஏன் இங்கிருக்கும் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒன்றிய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து சரியா ? தவறா ? தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஏன் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்கள்?. பி.எம்ஸ்ரீ திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்து இருந்தால் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தானே. இவ்விவாரத்தில் முதலமைச்சரும், பள்ளி கல்விதுறை அமைச்சரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். பொய்யும், பித்தலாட்டம் தான் ஒன்றிய அமைச்சரின் வேலை, அவர்களுக்கு உண்மை பேச தெரியாது. 

தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் போராடுவார்கள். தமிழ்நாடு மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் அமைதியாக உள்ளனர். தமிழ்நாடு மக்களை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இழிவு படுத்தியதற்கு அதிமுக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தமிழக மக்களுக்காக,  உரிமைக்காக போராடி கொண்டு இருக்கிறோம்.  அண்ணாமலை மற்றும் சீமான் யாருக்காக போராடுகிறார்கள்? பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்றாலே பிரிவினைவாதம் தான், மதம் நல்லிணக்கம் என்பதே தெரியாது. தேசத்தை பிளவு படுத்த வேண்டும், நிம்மதி இல்லாத சூழலை உருவாக்குவதே பாஜகவின் நிலையாகும்” என்றார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.