நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. விஜயலட்சுமி சீமானை விமர்சித்து அடிக்கடி வீடியோ வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட சீமான் என்னுடைய முதல் கணவர் என்கிட்ட வந்துடுங்க மாமா என்று கூறி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது அவர் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாஜக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் சீமான் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை அவரிடம் இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் மீண்டு வந்து போராட வேண்டும் என்று கூறினார். இதற்கு தான் தற்போது விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, திராவிட கட்சிகளும் பெரியார் அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்னுடைய வழக்கை வைத்து சீமானை ஒரே அடி அடிப்பது போன்றும் இதனால் அவர் சோர்ந்து விடக்கூடாது என்பது போலும் நீங்கள் ஆறுதல் சொல்வது இருக்கிறது. நீங்கள் சீமானிடம் சோர்வடையாமல் போராடுங்கள் என்று கூறுகிறீர்கள். எனக்கு அண்ணாமலை மேல் மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் உங்களுடைய நண்பன் சீமான் ஈழத்திற்காகவோ அல்லது கச்சத்தீவை மீட்பதற்காகவோ வழக்கு வாங்கி போராடவில்லை.
ஈழத் தமிழர்கள் இறந்து கொண்டிருந்த போது அவர் என்னுடன் வாழ்ந்தார். அப்போது என்னுடைய பணத்தை எல்லாம் புடுங்கி விட்டு பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தி தெருவில் விட்டுவிட்டு சென்றார். யாராவது அதைப் பற்றி கேட்டால் எனக்கு அவர் யார் என்றே தெரியாது என்கிறார். திமுக ஆட்சியில் காவல்துறையினர் கேட்கும் விதத்தில் கேட்ட பிறகு தான் அவர் குடும்பம் நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதை நீங்கள் பார்க்கவில்லை. நடிகை திரிஷாவை மன்சூர் அலிகான் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக மொத்த பாஜகவும் போராடினீர்கள்.
நடிகை குஷ்பூ பெரிய அளவில் குரல் கொடுத்தார். ஆனால் ஏன் என்னுடைய பிரச்சினை பற்றி உங்கள் கட்சியில் யாரும் பேசவில்லை. இதில் அரசியல் கிடையாது. இந்த வழக்கில் இருந்து சீமானை ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாற்றுகிறது என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அதனால்தான் திமுகவும் பெரியார் அமைப்பினரும் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். மேலும் சீமான் உங்களுக்கு நண்பராக இருந்தாலும் அவரை போன்ற ஒருவருக்கு நீங்கள் குரல் கொடுப்பதால் உங்களையும் தவறாக நினைக்க மாட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.