ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதன் பிறகு தீபிகா B. Ed முடித்த நிலையில் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் திருமணத்தின்போது பிரதீபின் கைகள் நடுங்கியதால் மணமகள் தீபிகா அவருக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளார். ஆனால் பிரதீப் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று விளக்கம் கொடுத்தார். ஆனால் சந்தேகத்தால் தீபிகா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தீபிகா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.