தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கனரா வங்கியில் கடந்த 2010ம் ஆண்டு கல்விக் கடன் வழங்க ரூ.8000 லஞ்சம் பெற்ற புகாரில், மேலாளர் சாமுவேல் ஜெபராஜ், தற்காலிக ஊழியர் நாராயணன் இருவரையும் சிபிஐ கைது செய்தது
கடந்த 2018ல் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிபிஐ உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தது
மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருக்கும் போதே, சாமுவேல் ஜெபராஜ் உயிரிழந்தார். இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் நாராயணனை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில வங்கிகள் கடன் வழங்கும் திட்டத்தில் மோசடி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.