உலர்ந்த திராட்சையை கொதிக்க வைத்து குடித்தால் எந்த உறுப்பை காக்கலாம் தெரியுமா ?
Top Tamil News March 18, 2025 11:48 AM

பொதுவாக ஆரோக்கியமற்ற  வாழ்க்கை முறையினாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இந்த லிவரை எப்படி நாம் பாதுகாக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.நம் உடலில் கல்லீரல் செய்யும் பணி மகத்தானது .
2.வயிற்றுக்குள் வந்த உணவில் இருக்கும் நச்சுக்களையும் ,வேதி பொருட்களையும் தனித்தனியாக பிரித்து ,சத்துக்களை மட்டும் நம் உடலில் உள்ள கை கால்களுக்கு அனுப்பும்  டூட்டியை லிவர் செய்கிறது .


3.மேலும் ரத்தத்தை நீர்த்து போக செய்யாமல் ஒரே நிலையில் உறைய வைக்கும் டூட்டியை கூட கல்லீரல்தான் செய்கிறது .
4.உடலின் மற்ற உறுப்புகளை காக்கும் பணியை செய்யும் இந்த கல்லீரலை நாம் காக்க சில பொருட்கள் உதவும்  .அவை பின்வருவன
5.உள்ளங்கை அளவு உலர்ந்த திராட்சையை ஒரு சொம்பு  தண்ணீரில் சுமார் 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து ,பின் குடிக்க கூடிய வெதுவெதுப்பான நிலையில் தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
6. திரிபலா  பவுடரை 1½ மேசைக்கரண்டி, ¼ டீஸ்பூன் இஞ்சி துண்டு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள்,¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து தண்ணீரில்  கொதிக்கவைத்து வெதுவெதுப்பான நிலையில் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இதனால் நம் லிவர் நன்றாக இருக்கும் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.