தண்டனை கொடுத்துருவாங்களோ…! பயத்தில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil March 22, 2025 05:48 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமயபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(48). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020 -ஆம் ஆண்டு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேகர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியதால் தனக்கு தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தில் சேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகரின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.