நமக்கு இது தேவையா..? மும்பை கேப்டனை வம்பிழுத்த ஆர்சிபி… “முதலில் கோப்பையை வெல்லுங்க”… கடுப்பான ரசிகர்கள்…!!
SeithiSolai Tamil March 23, 2025 04:48 AM

2024 IPL தொடரில் கேப்டன்சியைச் சுற்றிய கலகலப்புகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி வழிநடத்தலின் பின்னர், ருதுராஜ் கெய்க்வாட் மீது கேப்டன்சியை ஒப்படைத்தது ரசிகர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்பைப் பெற்றது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கருத்து முரண்பாடுகளை உருவாக்கியது. இந்த மாற்றத்தை தொடர்ந்து அணிக்குள் பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மும்பை அணி பிளேஆப் வாய்ப்பை இழந்தும் தொடரிலிருந்து வெளியேறியது.

இதேபோல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தற்போதைய சீசனுக்கு ரஜத் படிதாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அண்மையில் RCB இன் இன்ஃப்ளூயன்சர் நாக்ஸ் ரஜத் படிதாரை பேட்டி எடுத்தார். அப்போதுமுன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் வாழ்த்து கூறியதாக ரஜத் கூறினார். பின்னர் நாக்ஸ் எழுப்பிய “மற்ற அணிகளும் இதைப் பின்பற்ற வேண்டியதுதான்” என்ற கேள்விக்கு, “நான் அந்த விஷயங்களை பின்தொடர்வதில்லை” என ரஜத் பதிலளித்தார். இந்த பதில் சுவாரஸ்யமானதாகவும், சிலரால் சமாளிப்பு எனவும் கூறபடுகிறது.

இந்த வீடியோவை RCB தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, ரசிகர்களிடையே கலகலப்பான விவாதம் வெடித்துள்ளது. “இதைவிட முக்கியமானது ஒரு கோப்பையாவது வெல்லும் முயற்சி தான்” என RCB மீது சிலர் கடும் விமர்சனம் எழுப்பியுள்ளனர். IPL தொடங்குவதற்கும் முன்பாகவே, பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கிடையே வார்த்தை போர்களும் கலாய்ப்புகளும் நடந்துவரும் நிலையில், மைதானத்தில் இந்த அணிகள் மோதும் நாள் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மும்பை அணியில் கேப்டன் மாற்றப்பட்ட போது அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது ஆர்சிபி அணிக்கு அப்படிப்பட்ட எதிர்ப்புகள் எதுவும் இல்லை என்கிற விதத்தில் இந்த பேட்டி பார்க்கப்படுவதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் இது விவாத பொருளாக மாறி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.