வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம் - உளுந்தூர்பேட்டை அருகே சோகம்.!
Seithipunal Tamil March 24, 2025 04:48 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் நிச்சயதார்த்தத்திற்காக காஞ்சிபுரத்திற்கு வேனில் சென்றுகொண்டிருந்தனர். இந்த வேன், உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அதன் டயர் வெடித்துள்ளது. இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிக்சைக்காக சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.