அஜித் குமார் பற்றி மனோஜ் பாரதிராஜா முன்பு பேட்டி ஒன்றில் பேசிய வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் மனோஜ் பாரதிராஜா கூறியருப்பதாவது,
தல, தல. தாஜ்மஹால் படத்தில் வரும் திருப்பாச்சி அருவாள பாடல் ரெக்கார்டாகி வந்த உடன் அவருக்கு போட்டு காண்பித்தேன். ஆடியோவை கேட்க வைத்தேன். கெட்ட வார்த்தையில திட்டிட்டாரு. ப்ரெண்ட்லியா தான் திட்டினார்.
பயங்கர லக்கு டா உனக்கு. ஓபனிங் பாடலே இப்படியொரு பாடல். ஏ.ஆர். ரஹ்மான் இசை. உங்கப்பா படம். ப்ப்பானு சொன்னார். ஏங்க உங்களுக்கும் வரும்ங்க. ஏன் இப்படி ஃபீல் பண்றீங்கனு நான் சொன்னேன். நாங்க எல்லாம் கஷ்டப்பட்டோம்டா. உனக்கு எல்லாம் தாம்பூல தட்டில் வச்சு கொடுக்கிறாங்க. ரொம்ப கிண்டலாத் தான் சொன்னார். ரொம்ப ப்ரெண்ட்லி. அவருடன் இருக்கும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிண்டல் கேலிக்கு அளவே இருக்காது என்றார்.
தாஜ்மஹால் படத்தில் வந்த திருப்பாச்சி அருவாள பாடலை ரிப்பீட் மோடில் போட்டு கேட்டு ஃபீல் பண்ணுகிறார்கள் ரசிகர்கள். அட்டகாசமாக கோலிவுட் வந்த மனோஜ் பாரதிராஜா ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டார். அந்த நேரத்தில் மனைவி நந்தனாவும், அப்பாவும் தான் ஆறுதல் சொல்லி அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.