உஷார்... வரும் ஏப்ரல் 1ம் முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!
Dinamaalai March 30, 2025 01:48 PM

இந்த மாதம் நிறைவுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாற்றங்கள் வருகின்றன. யுபிஐயுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் 90 நாட்கள் வரையில் செயலற்ற நிலையில் இருந்நாளையுடன்தால், ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.

நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழக்கச் செய்துவிடும். செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன. இந்த செயல்பாட்டின் போது ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும் போது அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும். 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.