சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்களின் விலைக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று ஏப்ரல்1-ம் தேதி என்பதால் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 43.50 காசுகள் குறைந்து 1921.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி 818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.