ரேஷன் அட்டைதாரர்களே…! “இன்று முதல் ரேஷன் கார்டுகள் முடங்கும் அபாயம்”… மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா…?
SeithiSolai Tamil April 01, 2025 02:48 PM

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம். இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிடில் அந்த கார்டுகள் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆகும்.

அதன்படி நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்து விட்டது. இதனால் இகேஒய்சி செயல்பாட்டினை முடிக்காத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இகேஒய்சி அப்டேட் சரி பார்ப்பதற்கான கால அவகாசம் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் நீடிக்கப்படுகிறது.

மேலும் இகேஒய்சி செயல்பாட்டை முடிக்க ஒவ்வொரு முறையும் கால அவகாசம் நீடிக்கப்படும் நிலையில் இன்றும் கால அவகாசம் நீடிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.