“என் காதலனை தொடர்பு கொள்ள முடியல”… அதே ஐபோன் தான் வேணும்… பெற்றோரிடம் அடம் பிடித்த சிறுமி… வாங்கித் தராததால் நேர்ந்த அதிர்ச்சி…!!
SeithiSolai Tamil April 01, 2025 02:48 PM

பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் வசித்து வரும் 18 வயது சிறுமி ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக தனது பெற்றோரிடம் ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன் வாங்கி தரக்கோரி கேட்டு வந்துள்ளார். ஆனால் பெற்றோர் அதனை வாங்கித் தர மறுத்ததால் மனம் உடைந்த சிறுமி சம்பவ நாளன்று தனது அறைக்குச் சென்று தனது இடது கையை வெட்டியுள்ளார்.

இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு காயமடைந்த சிறுமியை பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது காயங்கள் குணப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

தனக்கு ஆப்பிள் போன் தான் வேண்டும். தனது காதலர் அதே போனை வைத்திருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே எனக்கு அந்த போன் தான் வேண்டும்” என கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெற்றோர்களின் நிலைமையை அறிந்து நடக்காத இதுபோன்ற சிறுவர்களின் செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.