உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோஹி மாவட்டத்தில் கொய்ராவ்னா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு கீதா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் யோகேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இவர்களுக்கு மே மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி ல்கீதா தேவி தன்னுடைய மகள் மற்றும் வீட்டில் இருந்த நகை பணம் போன்றவைகளை காணவில்லை என்று கூறி திடீரென போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் யோகேஷின் தம்பி ராஜா தான் தன்னுடைய மகளை கடத்தி சென்றதாகவும் கூறினார். அந்த புகாரின் படி ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.