மனோஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினி, எஸ்.கே, தனுஷ், விஷால்.. சிம்பு என்ன செய்தார் தெரியுமா..?
Newstm Tamil March 27, 2025 09:48 AM

நடிகர் மனோஜ் பாரதிராஜா மாரைடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த செய்தி அறிந்த இசைஞானி இளையராஜா வீடியோ மூலம் அவரது நண்பர் பாரதிராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்பு மனோஜிற்கு இரங்கல் தெரிவத்தார்.

 

மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பாரதிராஜாவின் நிலை அறிந்து கண்ணீர் விட்டு அழுதார். சோர்வாக இருந்த அவர், பாரதிராஜாவை எப்படி தேற்றுவது தெரியவில்லை, அவரை நினைத்தால் மனம் பதறுகிறது என கூறினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சமுத்திரம் படத்தில் மனோஜ் சரத்குமாருக்கு தம்பியாகவும் அவரும் ஒரு ஹீரோவாக நடித்திருந்தார். இதில் அவரது கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோன்று நடிகர் விஜய் தனது நண்பர் சஞ்சீவுடன் வந்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனோஜ் தங்கியிருக்கும் வீட்டின் அருகே தான் விஜயின் வீடும் இருக்கிறது. இருவரும் அருகில் இருந்தாலும் நண்பர்களாகவே இருந்துள்ளனர்.

 

சிம்பு நடித்த ஈஸ்வரன், மாநாடு படங்களில் மனோஜ் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது உடலுக்கு சிம்பு அஞ்சலி செலுத்தவில்லையே என பலரும் கேட்டிருந்தாலும், நெருங்கிய நண்பரும், நல்ல நடிகரான மனோஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என சிம்பு தனது சமூகவலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் மனோஜ் உதவி இயக்குநராக பணியாற்றிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், மனோஜ் இறந்த செய்தி ரஜினிகாந்திற்கு தெரியாமலா இருந்திருக்கும். பதினாறு வயதினிலே படத்தில் ரஜினிகாந்தின் வில்லத்தனத்தை பாராட்டதவர்களே இல்லை. இப்படிப்பட்ட பாரதிராஜாவையும் அவர் மறந்துவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்விகளை கேட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவிக்காதது பேசுபொருளாகியிருக்கிறது.

கவுண்டமணி இரங்கல்: சமுத்திரம் படத்தில் மனோஜ் பாரதிராஜாவுடன் கவுண்டமணி இணைந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஆனாலும், உடல் அளவில் நலிந்திருக்கும் கவுண்டமணி 85 வயதிலும் மனோஜின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். அவரால் முடிகிறது, ஆனால், இளம் நடிகர்களால் முடியவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலின் போது விஷால் ஒரு அணியிலும், பாரதிராஜா எதிர் அணியிலும் போட்டியிட்டார். இதுதான் காரணமோ என்றும் நெட்டிசன்கள் போஸ்ட் பதிவிட்டனர். இதனிடையே, நீக் படத்தை பாராட்டி இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று மாலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்ட் போட்டார். ஆனால், அதற்கு இன்று மாலை வெங்கட் பிரபுவிற்கு நன்றி தெரிவிக்க முடிந்த அவரால், ஒரு இரங்கல் போஸ்ட் போட மனம் வரவில்லையா என தனுஷை ரசிகர்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

சினிமா திரையுலகில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட பாரதிராஜாவின் மீதான அன்பினால் மனோஜிற்கு வந்து அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துகின்றனர். ஆனால், முன்னணி நடிகர்கள் இப்படி செய்வது சரியா..? அல்லது மறந்துவிட்டனரா என்றும் ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.