ஐபிஎல் தொடரின் பதினெட்டாவது சீசன் ஆனது இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆனது முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. அதோட சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற RCB அணியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அந்த வரிசையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். அதாவது, “ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணிக்கு சமநிலை தேவை என்று நான் பேசினேன். இது வீரர்களை பற்றியது அல்ல அணியை பற்றியது. முந்தைய சீசன்களை விட ஆர்சிபி அணிக்கு 10 மடங்கு பலம் உள்ளது. அவர்கள் சிறந்த வீரர்களை வாங்கி சமநிலைப்படுத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.