முதுமையை விரட்டும் இளநீர் பானம்..!
Seithipunal Tamil March 27, 2025 08:48 AM

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இளநீருடன் சிறிதளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். இது முதுமையிலும் இளமை தோற்றத்துடன் இருக்க உதவி செய்கிறது.

* வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலம் கட்டுப்படுத்தப்பட்டு செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை சரி செய்கிறது.

* உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைத்து மலச்சிக்கல், மூல நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

* தினமும் இந்த பானத்தைக் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு போன்ற உடல் குறைபாடுகளை சரி செய்கிறது.

* இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கும் சீராக இரத்தம் செல்ல வழிவகை செய்கிறது.

* மாரடைப்பு, இதய நோய் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* வெறும் வயிற்றில் இந்த இளநீர் மற்றும் தேன் கலந்த பானகத்தை குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றி சிறுநீரக கல், சிறுநீர் பாதை தொற்று போன்ற பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கிறது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.