கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இருவர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் உபயோகப்படுத்தும் கழிவறையை பள்ளியில் படிக்கும் மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரித்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி தூண்டியது தெரியவந்தது. இதனால் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் தலைமை ஆசிரியையான பூங்கொடியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.