மணிரத்னம், இளையராஜா இருவரும் ஒண்ணா சந்தித்தது பாலுமகேந்திராவால தான். தனது முதல் படத்துக்கு இளையராஜா தான் மியூசிக் பண்ணனும்னு மணிரத்னம் சொன்னாராம். அதனால நண்பர் கேட்டதால பாலுமகேந்திரா தான் இளையராஜா கிட்ட மணிரத்னத்தைப் பற்றிச் சொன்னாராம். அந்த நேரத்துல இளையராஜா வாங்கிய சம்பளத்தை மணிரத்னத்தால கொடுக்க முடியலையாம். ரொம்ப அதிகம். பாலுமகேந்திரா பேசுனதால சம்பளத்துல 5ல ஒரு பங்கைத் தான் மணிரத்னத்துக்கிட்ட கேட்டாராம்.
இந்தக் கூட்டணி முதல்ல தமிழ் படத்துல தான் இணைய பிளான் போட்டாங்களாம். ஆனால் படமோ கன்னடத்துலதான் அமைந்ததாம். அந்தப் படத்தோட பேரு பல்லவி அனுபல்லவி. அதுல வர்ற எல்லாப் பாடல்களுமே பிரபலம். அதுல முதல்ல கமல்தான் நடிப்பதாக இருந்ததாம். அப்போ அவர் ராஜபார்வை படத்துல பிசியாக இருந்ததால அனில்கபூரை வைத்து மணிரத்னம் இயக்கினாராம்.
balumahendra
அதே போல மணிரத்னம் திவ்யான்னு ஒரு ஸ்கிரிப்ட் வச்சிருந்தாராம். அதுக்கு யாராவது தயாரிப்பாளர்கள் வருவார்களான்னு பார்த்துக்கிட்டு இருந்தாராம். ஆனால் அவர்கள் எல்லாரும் பகல்நிலவு, இதயக்கோவில் மாதிரியான படங்களைத் தான் கேட்டார்களாம். ஆனாலும் நாம சினிமாத்துறைக்கு இதுக்காகவா வந்திருக்கோம். எப்படியாவது திவ்யா கதையைப் படமா எடுக்கணுமேன்னு நினைச்சிக்கிட்டே இருந்துருக்காரு.
அதனால அந்தக் கதையில கொஞ்சம் மாற்றம் பண்ணி அவர் எடுத்த படம் தான் மௌனராகம். இந்தப் படத்தின் தலைப்பு இதயக் கோவில்லயே வந்துருக்குற ஒரு பாடல்தானாம். அது ‘நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா…’ என்ற பாடல். அதுல இருந்துதான் மௌனராகம் என்ற பெயரையே படத்துக்கு வைத்தாராம் மணிரத்னம்.
அந்த வகையில் மணிரத்னம், இளையராஜா காம்போவில் வந்த எல்லாப் படங்களுமே சூப்பர்ஹிட். குறிப்பாக பாடல்கள் எல்லாமே தெறிக்க விட்டன. பாடல்களைப் போலவே பிஜிஎம்மும் சூப்பர்ஹிட்தான். மணிரத்னம் நிராகரித்தும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை இளையராஜா அவரிடம் பேசி அந்தப் பாடலை வைக்கச் சொன்னார். சூப்பர்ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.