தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவலஞ்சுழி பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவை உள்ளூரில் ரௌடியாக வலம்வருகிறார்.
இதையும் படிங்க:
இந்நிலையில், இன்று சுவாமிமலை பகுதியில் இருந்த காளிதாஸ், மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட காளிதாசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இவர் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இன்று சுவாமிமலை பகுதியில் இருந்தவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காளிதாஸ் தனது வீட்டு வாசலிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் சகோதரரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: