IPL 2025- நூர் அஹமது, ருத்துராஜின் அபார ஆட்டத்தால் சென்னை வெற்றி
Top Tamil News March 24, 2025 05:48 AM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீவக் ஆட்டத்தில் இன்று எல் கிளாஸிகோ  எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின் வந்த வில் ஜேக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க , அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 29 ரன்களிலும்,திலக் வர்மா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. அனைவரும் நூர் அகமதுவின் சுழலில் வீழ்ந்தனர். இறுதிக்கட்டத்தில் வேக பந்துவீச்சாளர் தீபக் சாகர் அதிரடியாக ஆடி 28 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவரில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

156 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய சென்னை அணியின் ராகுல் திரிபாதி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் முத்துராஜ் 22 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா நிதானமாக ஆட மறுமுனையில் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்ததால் சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்து ஆட்டம் சிறிது பரபரப்பானது. நிதானமாக ஆடிய ரச்சின் ரவிந்தரா 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.19.1 ஒவ்வொரு முடிவில் சென்னை அணி 156 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரச்சின் ரவிந்தரா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை அணி தனது அடுத்த போட்டியை வரும் 28ஆம் தேதி இதே மைதானத்தில் பெங்களூருக்கு எதிராக விளையாடுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.