திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ் . 60 வயதான இவர் பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக காட்டேஜ் வைத்துள்ளார். சிவராஜுக்கு 2 மனைவிகள், 3 பிள்ளைகள். இதில் சிவராஜ் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி மதுரை அழகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்த சிவராஜ், அவரின் சகோதரி சந்தியால் மீண்டும் கொடைக்கானலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வீட்டுக்கு செல்லாத சிவராஜ் தொடர்ந்து காட்டேஜில் தங்கியிருந்தார். மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது சிவராஜ், உடன் சிகிச்சைப்பெற்ற மதுரை, தத்தனேரி பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (25), அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோரின் நட்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்கு பின்னரும் நட்பு தொடர்ந்த நிலையில் மார்ச் 20 ம் தேதி 6 பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியபின் சிவராஜ் பிற நபர்களிடம் சண்டையிட, ஆத்திரத்தில் சிவராஜை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், மதுபாட்டிலை உடைத்து சரமாரியாக குத்திக் கொன்றவர்கள், சிவராஜை கேம்ப்பயரில் தள்ளிவிட்டு, டீசல் ஊற்றி எரித்துக்கொலை செய்து விட்டனர்.
பகுதியளவு எரிந்த உடலை, 50 அடி பள்ளத்தில் தூக்கி எரிந்து தப்பிச்சென்றுவிட்டனர். சிவராஜ் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்த கவல்த்துறையினர், சிவராஜை தேடி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன், சிவராஜின் மரணம் குறித்து தனது மறுவாழ்வு மைய அதிகாரியிடம் கூறியுள்ளனர். இதன்பேரில், அவர் காவல்துறையினக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் மணிகண்டனை கைது செய்தனர்.