தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டு சேலை அணிந்து லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார். அதில் காதல் எப்போதும் வெல்லும் என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. 23 ஆண்டுகளாக கோலிவுடில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார். இந்த ஆண்டு அஜித் குமார் நடித்த விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷா அடுத்து அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப், சிரஞ்சீவியின் விஷ்வம்பரா, சூர்யாவின் 45 என வரிசையாக த்ரிஷா நடிப்பில் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சமீபத்தில், உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட த்ரிஷா தற்போது ஒரு போஸ்ட்டை போட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார். விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் மற்றும் ரெஜினா கசண்ட்ராவால் கடத்தப்படும் நடிகை த்ரிஷாவை அஜித்குமார் தேடி கண்டுபிடித்து காப்பாற்றுவதுதான் படத்தின் கதையாக அமைந்தது. குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித் மற்றும் த்ரிஷா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 11 நாளில் படம் வெளியாக உள்ள நிலையில், டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய செல்ல நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு ஸ்குவாட் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். த்ரிஷா ஓவர் ஸ்லிம் ஆகிவிட்டதை பார்த்து ரசிகர்கள், இதுக்கு மேல உடல் எடையை குறைக்க வேண்டாம் தலைவி என கேட்டுக்கொண்டனர். 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 என இந்த ஆண்டு அடுத்தடுத்து த்ரிஷா நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பச்சை நிற பட்டு சேலை உடுத்திக் கொண்டு கழுத்தில், காதில், மூக்கில், கையில் தங்க நகைகளை அணிந்து கொண்டு த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் அதற்கு கேப்ஷனாக 'Love always wins' என அவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. 41 வயதாகும் நடிகை த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். த்ரிஷாவுக்கு புதிதாக காதல் மலர்ந்துள்ளதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.